Skip to main content

இந்தியசுடர் செய்திமடல்

சமீபத்தில் நான் இந்தியசுடர் கல்வி அறக்கட்டளையின் செயல்பாடுகளை விவரிக்கும் செய்திமடலை தமிழில் தயாரித்தேன். இச்செய்திமடல் உங்கள்பார்வைக்கு...
-->
அன்புடையீர்,
வணக்கம். இந்தியசுடர் கல்வி அறக்கட்டளைக்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம் அறக்கட்டளை 2010-2011 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல்- ஆகஸ்ட்) நிறைவேற்றிய கல்விசார் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்புரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
158 புதிய உறுப்பினர்களுடன் இந்த நிதியாண்டில் இந்தியசுடரின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியசுடர் தற்போது தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மட்டுமின்றி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கல்விப்பணி செய்து வருகிறது.
கல்வி ஒன்று மட்டுமே பின்தங்கிய மக்கள் ஏற்றம் பெற வழிவகுக்கும்; தரமான கல்விதான் தனிமனிதன் முழுமைத்துவம் அடைய உதவும் என்ற சீரிய நோக்கில் இந்தியசுடர் திரட்டும் அனைத்து நன்கொடைகளும் கல்வியில் பின்தங்கிய அல்லது ஏழை மக்களுக்குத் தரமான கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு செலவிடப்படுகிறது.
இந்த செய்தி மடலுடன் இந்தியசுடரின் பல்வேறு கல்விப்பணிகளில் குறிப்பாக தமிழகத்தில் நிறைவேற்றிய திட்டங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.
பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப்புத்தகம் மற்றும் எழுதுபொருள் வழங்கல்
அரசுப்பள்ளியில் பயிலும் ஊரகப்பகுதி ஏழை மாணவர்களையும் ஆதரவு இல்லங்களில் வசிக்கும் மாணவ மாணவிகளையும் நேரில் சென்று அறிந்து தகுதியான அனைவருக்கும்
சீருடை, நோட்டுப்புத்தகங்கள் மற்றும் ஒரு ஆண்டு முழுவதிற்கும் தேவையான எழுதுபொருட்களை நம் உறுப்பினர்கள் மூலம் வழங்கி உள்ளோம்
பயன்பெற்ற பள்ளிகள் மற்றும் ஆதரவு இல்லங்கள்
· அரசு ஆரம்பப்பள்ளி, ராமையாபுரி, துவரங்குறிச்சி, திருச்சி மாவட்டம்
கிருஷ்ணராயபுரம், கரம்பை, பள்ளர்பட்டி, செல்வபுரம் ஊர்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கு சீருடை, நோட்டுப்புத்தகங்கள் மற்றும் ஒரு ஆண்டு முழுவதிற்கும் தேவையான எழுதுபொருட்கள் 05-06-2010 அன்று வழங்கப்பட்டது. திட்டச்செலவு: ரூ. 5365
இப்பள்ளியின் ஆசிரியர் திரு. பிரேம் நஷிர் அவர்களுக்கு இந்தியசுடர் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
· ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, எரசினம்பாளையம், திருப்பூர் மாவட்டம்
அறிவியல் மாதிரி விளக்க சாதனங்கள்,
கற்பிக்க உதவும் பெரிய அளவிலான ஜாமெட்ரி பாக்ஸ் மற்றும் விண்வெளி விளக்கப்படம் ஆகியவை அளிக்கப்பட்டன. திட்டச்செலவு: ரூ.1495. வளமான கற்பித்தலுடன் மாணவர்களைத் தயார்படுத்தும் ஆசிரியர் திரு. கு. மணிகண்டன் அவர்களை நம் அறக்கட்டளை பாராட்டுகிறது.
· சென்னையில் உள்ள பின்வரும் சிறப்புப் பள்ளிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன
சிறுவர் கருணை இல்லம், கொரட்டூர்; அரசு சிறுவர் இல்லம்,ராயபுரம்; அரசு சிறுமியர் இல்லம், புரசைவாக்கம்; புரட்சி அம்பேத்கார்நகர் மாணவர்கள், பெருங்குடி; ஆதிதிராவிட சமூக சேவாகரம்; மேகா அறக்கட்டளை, பரங்கிமலை; ரோட்டரி நகர் மாணவர்கள், மயிலாப்பூர்.
இவ்வாண்டு கர்நாடக மாநிலத்தில் 58 ஊரக அரசு பள்ளிகளுக்கு ஓர் ஆண்டிற்குத் தேவையான இலவச நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் மேற்குவங்காளம், ராஜஸ்தான்,மணிப்பூர் மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஊரக / அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் பணியமர்த்துதல்
ஊரக/சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர் பணியமர்த்துதலுக்கே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. அரசு இதனை செய்து வருகிறது என்றாலும் செயல்படுத்துவதில் உள்ள காலதாமதம் மாணவர்களின் கல்வித்திறனை பெரிதும் பாதிக்கும் என்பதால் தொலைநோக்குப் பார்வையுடன் இத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இடைவெளியை நிரப்புகிறோம்.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் அளிக்கிறோம். கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் திறனை மேம்படுத்த ஊரகப் பகுதிகளிலும், சிறுவர் இல்லங்களிலும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நன்கொடையாகப் பெறப்பட்ட பயன்படுத்திய கணினிகளைக் (used computers) கொண்டு இந்தியசுடர் கணினி பயிற்சி மையங்களை நிறுவி வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் (syllabus) மாணவர்களுக்கு கணினிக் கல்வி அளிக்கிறது.
தமிழகத்தில் இந்தியசுடர் ஆசிரியர்களை நியமித்துள்ள பள்ளிகள்/ காப்பகங்கள்/ கணினி மையங்களில் சில
· கல்வியில் பின்தங்கியவர்களுக்கு சிறப்பு பயிற்சிவகுப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதன்பேட்டை, கரூர் மாவட்டம்.
· அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யலூர், திண்டுக்கல் மாவட்டம்
· அரசு நடுநிலைப்பள்ளி, மாத்தூர், திண்டுக்கல் மாவட்டம்
· அரசு உயர்நிலைப்பள்ளி, கடுவன்குடி, நன்னிலம் திருவாரூர் மாவட்டம்
· அரசு மேல்நிலைப்பள்ளி, அக்கூர், தரங்கம்பாடி, நாகப்பட்டினம் (தொழிற்பிரிவு ஆசிரியர்)
· மனம் மலரட்டும் கல்வி மையம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்
· அரசு மேல்நிலைப்பள்ளி, புதூர்நாடு, வேலூர் மாவட்டம்
· இந்தியசுடர் கணினி மையம், அரசு துவக்கப்பள்ளி, மாயனூர், கரூர் மாவட்டம்
· இந்தியசுடர் கல்வி மையம், ராக்கிக்கோட்டம், ஆட்சியரகம் அஞ்சல், திண்டுக்கல்.
· இந்தியசுடர் கல்வி மையம், பாறைபட்டி மற்றும் வேடசந்தூர், திண்டுக்கல்.
· இந்தியசுடர் கல்வி மையம், ஹசாநாத்புரம் மற்றும் குட்டைகுளம், திண்டுக்கல்.
· அரசு நடுநிலைப்பள்ளி, உழலூர், செங்கல்பட்டு மாவட்டம்
· ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எரசினம்பாளையம், திருப்பூர் மாவட்டம்
· நியூலைஃப் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம், இறையூர், மாத்தூர் அஞ்சல்,காஞ்சிபுரம் - 2 ஆசிரியர்கள்
· இந்தியசுடர் கணினி மையம், ரங்கநாதன்பேட்டை, கரூர் மாவட்டம்.
· மாலைநேர பயிற்சிமையம், அம்பேத்கார் புரட்சிநகர், பெருங்குடி, சென்னை.
· கணினி மையம், ராஜபாளையம், விருதுநகர்மாவட்டம்.
இவற்றுடன் சேர்த்து மொத்தம் 85 கல்வி மையங்கள் மற்
றும் 11 கணினி பயிற்சி மையங்கள் இந்தியசுடரால் ஏற்று நடத்துப்படுகிறது. தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மட்டும் அனைத்து மாநிலங்களையும் சேர்த்து மாதந்தோறும் சுமார் ரூ.72,000/- செலவிடப்படுகிறது.

கிராமப்புறப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்
ஊரக மாணவர்களுக்கு மேற்படிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பள்ளிகளில் உயர்கல்வி குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
"இந்தியசுடர் உயர்கல்வி வழிகாட்டி" என்ற 16 பக்க கையேட்டைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்தக் கல்வியாண்டில் கீழ்க்கண்ட பள்ளிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலந்துகொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.
· அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம், நாமக்கல்
· அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளியங்காடு, கோயம்புத்தூர்
· அரசு மேல்நிலைப்பள்ளி, சமயநல்லூர்,மதுரை
· பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மதுரை
· அரசு மேல்நிலைப்பள்ளி, அக்கூர், தரங்கம்பாடி, நாகப்பட்டினம் (8000 மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது)
நிதிவசதி இல்லாத மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை அளித்தல்
மாணவ/மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் முன் அவர்களின் குடும்பசூழல் தற்போதைய பொருளாதார நிலையை ஆராய்ந்து உதவி அளிக்கப்படுகிறது. பள்ளி,கல்லூரி கட்டணங்கள் எனில் அவை நேரடியாக பள்ளி/கல்லூரிகளில் செலுத்தும் வகையில் காசோலையாக அளிக்கப்படுகிறது. பிற தேவைகளுக்குக்கான உதவிகள் அந்தந்த மாணவர் பெயரில் காசோலையாக வழங்கப்படுகிறது.
இக்கல்வியாண்டில் நம் அறக்கட்டளையின் வாயிலாகப் பயன்பெற்ற சிலர்
பெயர்
படிப்பு
உதவித்தொகை
பாத்திமா
II BBA
ரூ. 4800
தமிழரசி
II BBA
ரூ. 2629
வளர்மதி அபிநயா
4 STD & 2 STD
ரூ. 6060
மாரியம்மாள்
II Diploma (ECE)
ரூ. 4000
சிவகுமார்
II BA (வரலாறு)
ரூ. 4131
காமராஜ்
XI STD
ரூ. 2300
வி.அர்ச்சனா
I B.Sc (கணிதம்)
ரூ. 6225
டி.சந்தோஷ் குமார்
III STD
ரூ. 5492
சதிஷ்
II B.Com
ரூ. 3000
பி.விமலா
III STD
ரூ. 4250
எம்.தமிழன்
Diploma III (Mech)
ரூ. 10,000
ராஜேஸ்வரி
I B.Sc (நர்சிங்)
ரூ. 10,500


நூலகங்கள்
புத்தக வாசிப்பு மனிதனை முழுமையாக்குகிறது. வாசிக்கும் பழக்கம் பள்ளிப்பருவத்திலேயே வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசுபள்ளிகளில் மற்றும் கருணை இல்லங்களிலும் இந்தியசுடர் நூலகங்களை அமைத்துள்ளது. நூலகத்திற்குத் தேவையான அலமாரி, மாணவர்களுக்கு ஏற்ற சுவையான புத்தகங்கள், வார-மாத இதழ்கள் மற்றும் பதிவேடு உள்ளிட்ட அனைத்தையும் இந்தியசுடர் வழங்குகிறது. அலமாரி வைத்துள்ள பள்ளிகளுக்கு புத்தகங்கள் மட்டும் அளிக்கப்படும்.
சென்ற நிதியாண்டில் நிறுவப்பட்ட 18 நூலகங்களுடன் இந்த ஆண்டு கீழ்க்கண்ட இடங்களில் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
· அரசினர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, செங்கல்பட்டு
· அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம், நாமக்கல்
· அரசு ஆதரவற்றோர் இல்லம், செங்கல்பட்டு
இந்தியசுடர் செயல்படும் விதம்
இந்தியசுடர் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் பயனாளிகளைப் பற்றிய முழு விவரங்களைப் பெற்று பள்ளிக்கூடமோ அல்லது காப்பகங்களோ எதுவாயினும் நம் உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராய்ந்த பின்னர் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவிற்குப் பரிந்துரைக்கின்றனர். தலைமைக்குழு அனைத்துத் தகவல்களையும் ஆராய்ந்து பயனாளிகள் நேரடியாக பயன்களைப் பெறும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலதரப்பட்ட வேண்டுதல்கள் வரும்பொழுது, அவற்றில் அதிமுக்கியமான மற்றும் நிறைவேற்றும்படியான தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தியசுடரின் அப்போதைய நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
நம் அறக்கட்டளையின் பணிகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. எந்தத் திட்டத்திற்கு எந்த ஊரில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது, யாருக்கு அளிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொண்ட வரவு செலவு விவரங்கள் மிகவும் வெளிப்படையாக உறுப்பினர் அல்லாதவரும் அறியும் வகையில் ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. உறுப்பினர்கள் இதனை மின்னஞ்சலில் பெறுவார்கள்.
நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்…..
India Sudar Educational and Charitable Trustஎன்ற பெயருக்கு டிடி(DD), காசோலையை(Cheque) அல்லது பணவிடையை (Money order) கீழ்க்கண்ட இந்தியசுடர் அறக்கட்டளையின் முகவரிக்கு அனுப்பலாம்.
நன்கொடை அளிக்கும்போது உங்கள் முகவரியைக் கட்டாயம் குறிப்பிடுங்கள்.
INDIA SUDAR,
Suresh R,
467/3, Papamma Layout III Cross,
Ramamurthy Nagar,
Bangalore - 560 016, KA, India.
(திரு சுரேஸ் அவர்கள் அறக்கட்டளையின் வரவு செலவு கணக்காளர் ஆவார்.)
நமது பணிகளைத் திறம்பட செயல்படுத்த தங்களின் நண்பர்களையும் உறவினர்களையும் நன்கொடையாளர்களையும் இந்தியசுடருடன் இணையச் செய்யுங்கள்.
இந்தியசுடரின் பணிகள் பற்றி மேலும் விவரங்கள் அறிய www.indiasudar.org indiasudar.wordpress.com என்ற இணையதளங்களைப் பாருங்கள். admin@indiasudar.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
 

Comments

Popular posts from this blog

நான் ரசித்த கவிதைகள் /துணுக்குகள் சில

"பூபாளத்திற்கொரு புல்லாங்குழலில்"  வெ . இறையன்பு IAS காக்கா - கவிஞன் காகமே ! மயிலையும் குயிலையும் மணிக்கணக்காய் எத்தனையோ புலவர்கள் பாட அதிகமாய் பாடாத உன்னை நான் பாடுகிறேன் பறவைகளில் நீ கறுப்பு என்பதால் பாடாமல் விட்டார்களா ? குயில் கூட கறுப்புதான் ஆனால் அதன் கறுப்பில் கூட பளபளப்பு எனவே தான் பாடிவிட்டார்கள் போலும் . ஆகாயத் தோட்டியை அழுக்குகளை அப்புறப்படுத்தும் உன்னை எப்படியெல்லம் அவமானப்படுத்துகிறோம் ?. காக்காய்க் குளியலெனவும் காக்காய்ப் பிடிப்பதெனவும் காக்காய் வலிப்பதெனவும் காரணமில்லாமல் உன்னை வைகின்றனர் வையகத்தார் . குறும்புக்காரக் குயில்களுக்கு நீ தானே அடைகாக்கும் ஆதரவான செவிலித்தாய் அகத்தியன் கமன்டலத்தை அன்று நீ கவிழ்த்தியிருக்காவிட்டால் காவிரி ஏது ? கல்லனை ஏது ?. கவிழ்த்ததே கவிழ்த்தாயே தமிழக எல்லையில் கவிழ்த்திருக்கக் கூடாதா ! எனச் சிலர் கவலைப்படுகிறார்கள் . கூடிவாழும் குணத்தை மனித்னுக்கு போதிக்க எத்தனை முறை முயன்றும் நீ ஏமாந்தே போனாய் . இனத்துக்குள் சண்டையிடும் இழிந்த

பொறியியல் துறையில் கணிதத்தின் முக்கியத்துவம்

+2 மாணவர்களே உங்களில் பலர் பொறியியல் துறையில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பீர். உங்களுக்காக சில தகவல்கள் பொறியியல் துறையில் பட்டம் பெற விரும்பும் நீங்கள் கணிதப்பாடத்தில் அதிக விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். கணிதப்பாடத்தில் உங்கள் மதிப்பெண் குறைந்திருக்கலாம். அதற்காக உங்களுக்கு கணிதப்பாடத்தில் ஆர்வமில்லை என்று ஆகிவிடாது. பொறியியல் படிப்பு என்பது பயன்பாட்டு கணிதம் மற்றும் பயன்பாட்டு இயற்பியல் (Applied Mathematics & Applied Physics) ஆகிய இரண்டும் சேர்ந்த ஓரு கலவை. ஒவ்வொரு பொறியியல் துறை சார்ந்து இவற்றின் விகிதம் மாறுபடலாம். ஆனால் இயற்பியலும் கணிதமும் சேர்ந்ததுதான் பொறியியல். அறிவியலின் மொழி 'கணிதம்'. நான்கு பக்கத்திற்கு விவரித்து கூறவேண்டிய ஒரு இயற்பியல் கோட்பாட்டை ஒற்றை வரி கணிதச் சமன்பாட்டில் அடக்கிவிடலாம். வகை நுண்கணிதம் , தொகை நுண்கணிதம், வடிவியல் , முக்கோணவியல் என கணிதத்தின் அனைத்து உட்பிரிவுகளின் துணைகொண்டே அறிவியலை முழுமையாக விளக்க முடியும். பொறியியலின் அடிப்படை கூறுகளைத் திறம்பட கற்றவர்களுக்கே சிறப்பான வேலைவாய்ப்பு காத்திருக்கி