இது மனிதக் காட்சிசாலை
மிருகங்கள் அவ்வப்போது
வந்து செல்லும்.
Friday, May 23, 2008
வேலைக்காரி
எஜமானரை வளைக்க நினைக்கும்
வேலைக்காரி துணுக்குகளை
ஏதிர் கொள்கையில்
தவிர்க்க நினைத்தும்
துளிர் விடுகிறது கண்ணீர்.
................... எங்கோ ப(பி)டித்தது
வேலைக்காரி துணுக்குகளை
ஏதிர் கொள்கையில்
தவிர்க்க நினைத்தும்
துளிர் விடுகிறது கண்ணீர்.
................... எங்கோ ப(பி)டித்தது
Wednesday, May 21, 2008
நான் ரசித்த கவிதைகள் சில
"பூபாளத்திற்கொரு புல்லாங்குழலில்"
தனிக்கட்சி
நாங்கள் இருவரும்
காதலில் நம்பிக்கையில்லை
என்ற
எங்கள் ஒத்த கருத்தினால்
அறிமுகமாகி,
சந்தித்து, பேசி
நண்பர்களானோம்.
அடுத்து ஆவணியில்
எங்கள்
திருமணம்.
------------------------------------------------------------------------------------------------------
தன் பங்குக்கு...
எரியாத மின்விளக்கை
ஏளனம் செய்தது நாய்
தன் பின்னங்காலைத் தூக்கி.
------------------------------------------------------------------------------------------------------------
விரலைக் கிள்ளும் நகம்.
சுப்ரமணிய செட்டியார் நகரில்
கோவிந்தசாமி முதலியார் தெருவில்
ராமசாமி நாயக்கர் சந்திப்பில்
குப்புசாமி ஆசாரி மண்டபத்தில்
நடக்கும்
கவிதை போட்டி தலைப்பு
"சாதிகள் இல்லையடி பாப்பா"
---------------------------------------------------------------------------------------------------------
தனிக்கட்சி
நாங்கள் இருவரும்
காதலில் நம்பிக்கையில்லை
என்ற
எங்கள் ஒத்த கருத்தினால்
அறிமுகமாகி,
சந்தித்து, பேசி
நண்பர்களானோம்.
அடுத்து ஆவணியில்
எங்கள்
திருமணம்.
------------------------------------------------------------------------------------------------------
தன் பங்குக்கு...
எரியாத மின்விளக்கை
ஏளனம் செய்தது நாய்
தன் பின்னங்காலைத் தூக்கி.
------------------------------------------------------------------------------------------------------------
விரலைக் கிள்ளும் நகம்.
சுப்ரமணிய செட்டியார் நகரில்
கோவிந்தசாமி முதலியார் தெருவில்
ராமசாமி நாயக்கர் சந்திப்பில்
குப்புசாமி ஆசாரி மண்டபத்தில்
நடக்கும்
கவிதை போட்டி தலைப்பு
"சாதிகள் இல்லையடி பாப்பா"
---------------------------------------------------------------------------------------------------------
காக்கா - கவிஞன்
காகமே!
மயிலையும் குயிலையும்
மணிக்கணக்காய்
எத்தனையோ புலவர்கள் பாட
அதிகமாய் பாடாத
உன்னை நான் பாடுகிறேன்
பறவைகளில் நீ கறுப்பு
என்பதால் பாடாமல் விட்டார்களா?
குயில் கூட கறுப்புதான்
ஆனால் அதன் கறுப்பில் கூட பளபளப்பு
எனவே தான் பாடிவிட்டார்கள் போலும்.
ஆகாயத் தோட்டியை
அழுக்குகளை அப்புறப்படுத்தும்
உன்னை எப்படியெல்லம்
அவமானப்படுத்துகிறோம்?.
காக்காய்க் குளியலெனவும்
காக்காய்ப் பிடிப்பதெனவும்
காக்காய் வலிப்பதெனவும்
காரணமில்லாமல் உன்னை
வைகின்றனர் வையகத்தார்.
குறும்புக்காரக் குயில்களுக்கு
நீ தானே
அடைகாக்கும் ஆதரவான
செவிலித்தாய்
அகத்தியன் கமன்டலத்தை
அன்று நீ கவிழ்த்தியிருக்காவிட்டால்
காவிரி ஏது? கல்லனை ஏது?.
கவிழ்த்ததே கவிழ்த்தாயே
தமிழக எல்லையில் கவிழ்த்திருக்கக் கூடாதா!
எனச் சிலர் கவலைப்படுகிறார்கள்.
கூடிவாழும் குணத்தை மனித்னுக்கு
போதிக்க எத்தனை முறை முயன்றும்
நீ ஏமாந்தே போனாய்.
இனத்துக்குள் சண்டையிடும்
இழிந்த பழக்கம் இல்லாத
இனிய பறவையே!
வெள்ளைக்கார ஆந்தைகளின்
நிறவெறிக்குப் பலியாகும்
நீக்ரோக்களே!
இனத்தைச் சேர்ந்தவர்
இறந்தால்
அனுதாபக் கூட்டம் அவசரமாய்
நடத்தும் காகாபிமானம் கொண்ட
நீ தான்
நாகரிக உச்சியில் நிற்கிற
நல்ல பறவை.
யாருமே பாடாத உன்னை
நான் பாடியதால் பெருமை உனக்கல்ல
எனக்குத்தான்.
----- "பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்", வெ.இறையன்பு IAS
மயிலையும் குயிலையும்
மணிக்கணக்காய்
எத்தனையோ புலவர்கள் பாட
அதிகமாய் பாடாத
உன்னை நான் பாடுகிறேன்
பறவைகளில் நீ கறுப்பு
என்பதால் பாடாமல் விட்டார்களா?
குயில் கூட கறுப்புதான்
ஆனால் அதன் கறுப்பில் கூட பளபளப்பு
எனவே தான் பாடிவிட்டார்கள் போலும்.
ஆகாயத் தோட்டியை
அழுக்குகளை அப்புறப்படுத்தும்
உன்னை எப்படியெல்லம்
அவமானப்படுத்துகிறோம்?.
காக்காய்க் குளியலெனவும்
காக்காய்ப் பிடிப்பதெனவும்
காக்காய் வலிப்பதெனவும்
காரணமில்லாமல் உன்னை
வைகின்றனர் வையகத்தார்.
குறும்புக்காரக் குயில்களுக்கு
நீ தானே
அடைகாக்கும் ஆதரவான
செவிலித்தாய்
அகத்தியன் கமன்டலத்தை
அன்று நீ கவிழ்த்தியிருக்காவிட்டால்
காவிரி ஏது? கல்லனை ஏது?.
கவிழ்த்ததே கவிழ்த்தாயே
தமிழக எல்லையில் கவிழ்த்திருக்கக் கூடாதா!
எனச் சிலர் கவலைப்படுகிறார்கள்.
கூடிவாழும் குணத்தை மனித்னுக்கு
போதிக்க எத்தனை முறை முயன்றும்
நீ ஏமாந்தே போனாய்.
இனத்துக்குள் சண்டையிடும்
இழிந்த பழக்கம் இல்லாத
இனிய பறவையே!
வெள்ளைக்கார ஆந்தைகளின்
நிறவெறிக்குப் பலியாகும்
நீக்ரோக்களே!
இனத்தைச் சேர்ந்தவர்
இறந்தால்
அனுதாபக் கூட்டம் அவசரமாய்
நடத்தும் காகாபிமானம் கொண்ட
நீ தான்
நாகரிக உச்சியில் நிற்கிற
நல்ல பறவை.
யாருமே பாடாத உன்னை
நான் பாடியதால் பெருமை உனக்கல்ல
எனக்குத்தான்.
----- "பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்", வெ.இறையன்பு IAS
Monday, February 18, 2008
படித்ததில் ரசிதத உவமை
கொட்டாங்குச்சியில் அடுப்பு எரிக்கலாம் என்பதற்காக கொலஸ்ட்ரால் உள்ளவன் தேங்காய் வாங்குவது போல.....படித்ததில் ரசித்த உவமை
இறையன்பு - ஓடும் நதியின் ஓசை
வாழும் காலத்தில் பிரபலமானவர்கள் பட்டியலில் பாரதி பெயர் இல்லை. அவர்கள் மிட்டாய்க்கு ஆசைப்படாததால் அவர்களுக்கு உலகம் விருந்து தந்து கெளரவித்தது. நாம் தற்காலிக ஆசைகளைத் தாங்கியிருபதால் வாழ்க்கை "கமர்க்கட்டைத்" தந்துவிட்டு கழுத்து சங்கிலியைப் பறித்துக் கொள்கிறது.
Subscribe to:
Posts (Atom)
