Skip to main content

பொறியியல் துறையில் கணிதத்தின் முக்கியத்துவம்

+2 மாணவர்களே உங்களில் பலர் பொறியியல் துறையில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பீர். உங்களுக்காக சில தகவல்கள்

பொறியியல் துறையில் பட்டம் பெற விரும்பும் நீங்கள் கணிதப்பாடத்தில் அதிக விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். கணிதப்பாடத்தில் உங்கள் மதிப்பெண் குறைந்திருக்கலாம். அதற்காக உங்களுக்கு கணிதப்பாடத்தில் ஆர்வமில்லை என்று ஆகிவிடாது.

பொறியியல் படிப்பு என்பது பயன்பாட்டு கணிதம் மற்றும் பயன்பாட்டு இயற்பியல் (Applied Mathematics & Applied Physics) ஆகிய இரண்டும் சேர்ந்த ஓரு கலவை. ஒவ்வொரு பொறியியல் துறை சார்ந்து இவற்றின் விகிதம் மாறுபடலாம். ஆனால் இயற்பியலும் கணிதமும் சேர்ந்ததுதான் பொறியியல்.

அறிவியலின் மொழி 'கணிதம்'. நான்கு பக்கத்திற்கு விவரித்து கூறவேண்டிய ஒரு இயற்பியல் கோட்பாட்டை ஒற்றை வரி கணிதச் சமன்பாட்டில் அடக்கிவிடலாம். வகை நுண்கணிதம் , தொகை நுண்கணிதம், வடிவியல் , முக்கோணவியல் என கணிதத்தின் அனைத்து உட்பிரிவுகளின் துணைகொண்டே அறிவியலை முழுமையாக விளக்க முடியும்.

பொறியியலின் அடிப்படை கூறுகளைத் திறம்பட கற்றவர்களுக்கே சிறப்பான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. அடிப்படைக் கூறுகளைக் கற்பதற்கு 'தர்க்கரீதியாக சிந்திக்கும் ஆற்றல்' (Logical Thinking) பகுத்தாயும் திறன் (Critical Reasoning) ஆகியவை அவசியம். கணிதத்தை ஈடுபாட்டோடும் ஆர்வத்துடனும் கற்பவர்களுக்கு இத்திறன்  இயல்பாகவே அமையும்.

உதாரணத்திற்கு கணிதப் பாடத்தில் கொடுக்கப்பட்ட கணக்குகளுக்கு நாம் தீர்வு காண, நமக்கு தரப்பட்ட தரவுகளை முழுமையாக ஆராய்ந்து, பல வழிமுறைகளில் இருப்பினும் எந்த வழிமுறை நமக்கு கொடுக்கப்பட்ட தரவுகளுக்கு ஏற்ப பயன்படும் என அலசி (Analysis & Reasoning), அதனை ஒவ்வொரு படியாக பயன்படுத்தி விடையினை எட்டுவோம்.

அதே நடைமுறைதான் தர்க்கரீதியாக தொழில்நுட்பத்தை கற்பதற்கும் பொருந்தும். பொறியியல் தீர்வுகளை (Solutions to Engineering Problems) அடைய பல உத்திகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து , அவற்றுள் சிறப்பான உத்தி கையாளப்படும்.

பொறியியல் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண்ணில் கணிதத்திற்கு 50% பங்கு அளிக்கப்பட்டதற்கும் அதுவே காரணம். மின்னணு பொறியியல், கணிணி அறிவியல் உள்ளிட்ட பொறியியல் துறைகள் 60% கணிதத்தை அடிப்படையாகக் கொண்டவை.

எனவே கணிதத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கணிதப் பாடத்தின் மேல் நீங்கள் கொண்ட ஆர்வமும் அதன் கோட்பாடுகளை கற்க நீங்கள் எடுக்கும் முயற்சியுமே பொறியியல் பாடங்களை உள்ளார்ந்து புரிந்து படித்து வெற்றி பெற உதவும்

மா.ராஜாமாடசாமி
உதவி பேராசிரியர் /மின்னணுவியல்
அரசினர் பொறியியற் கல்லூரி போடிநாயக்கனூர்

Comments

Popular posts from this blog

நான் ரசித்த கவிதைகள் /துணுக்குகள் சில

"பூபாளத்திற்கொரு புல்லாங்குழலில்"  வெ . இறையன்பு IAS காக்கா - கவிஞன் காகமே ! மயிலையும் குயிலையும் மணிக்கணக்காய் எத்தனையோ புலவர்கள் பாட அதிகமாய் பாடாத உன்னை நான் பாடுகிறேன் பறவைகளில் நீ கறுப்பு என்பதால் பாடாமல் விட்டார்களா ? குயில் கூட கறுப்புதான் ஆனால் அதன் கறுப்பில் கூட பளபளப்பு எனவே தான் பாடிவிட்டார்கள் போலும் . ஆகாயத் தோட்டியை அழுக்குகளை அப்புறப்படுத்தும் உன்னை எப்படியெல்லம் அவமானப்படுத்துகிறோம் ?. காக்காய்க் குளியலெனவும் காக்காய்ப் பிடிப்பதெனவும் காக்காய் வலிப்பதெனவும் காரணமில்லாமல் உன்னை வைகின்றனர் வையகத்தார் . குறும்புக்காரக் குயில்களுக்கு நீ தானே அடைகாக்கும் ஆதரவான செவிலித்தாய் அகத்தியன் கமன்டலத்தை அன்று நீ கவிழ்த்தியிருக்காவிட்டால் காவிரி ஏது ? கல்லனை ஏது ?. கவிழ்த்ததே கவிழ்த்தாயே தமிழக எல்லையில் கவிழ்த்திருக்கக் கூடாதா ! எனச் சிலர் கவலைப்படுகிறார்கள் . கூடிவாழும் குணத்தை மனித்னுக்கு போதிக்க எத்தனை முறை முயன்றும் நீ ஏமாந்தே போனாய் . இனத்துக்குள் சண்டையிடும் இழிந்த

இந்தியசுடர் செய்திமடல்

சமீபத்தில் நான் இந்தியசுடர் கல்வி அறக்கட்டளையின் செயல்பாடுகளை விவரிக்கும் செய்திமடலை தமிழில் தயாரித்தேன். இச்செய்திமடல் உங்கள்பார்வைக்கு... --> அன்புடையீர் , வணக்கம். இந்தியசுடர் கல்வி அறக்கட்டளைக்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம் அறக்கட்டளை 2010-2011 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ( ஏப்ரல்- ஆகஸ்ட்) நிறைவேற்றிய கல்விசார் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்புரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். 158 புதிய உறுப்பினர்களுடன் இந்த நிதி யாண்டில் இந்தியசுட ரின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியசுடர் தற்போது தமிழகம் , கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மட்டுமி ன்றி மத்தியப்பிரதேசம் , ராஜஸ்தான் , மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கல்விப்பணி செய்து வருகிறது. கல்வி ஒன்று மட்டுமே பின்தங்கிய மக்கள் ஏ ற்றம் பெற வழிவகுக்கும் ; தரமான கல்விதான் தனிமனிதன் முழுமைத்துவம் அடைய உதவும் என்ற சீரிய நோக்கில் இந்தியசுடர் திரட்டும் அனைத்து நன்கொடைகளும் கல்வியில் பி